காங்கிரஸ் டூ பா.ஜ.க.., தி.மு.க. வரலாறை சொல்லட்டுமா.. திருநாவுக்கரசர்

Thirunavukkarasar on Congress–DMK alliance : காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த தி.மு.க, பா.ஜ.க.வில் கூட்டணி சேர்ந்த வரலாறும் உண்டு; தி.மு.க.வினர் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: May 24, 2026 at 5:13 pm

சென்னை, மே 24, 2026: திமுக-வினர் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வரும் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “கடந்த காலங்களில் ஒன்றாக கூட்டணியில் இருந்ததை நினைத்து, திமுக-வினர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது” என்று அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் சி.பி. ஆதித்தனாரின் 45-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியார். அப்போது திருநாவுக்கரசர், “சி.பா ஆதித்தனார் அறிவு புரட்சியை ஏற்படுத்தியவர். சிறந்த சபாநாயகர், அமைச்சர், பத்திரிக்கை நிறுவனர் என பன்முகம் கொண்டவர்” என்றார்.

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பிரிவு

தொடர்ந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பிரிவு பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், “திமுக-வினர், காங்கிரஸை தரக்குறைவாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். காங்கிரஸ்–திமுகவை பொறுத்தமட்டில், பல ஆண்டுகளாக சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக உறுப்பினர்களும் பணியாற்றியுள்ளனர். அதேநேரம், திமுக, காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தபோது பாஜகவுடனும் இணைந்து செயல்பட்டது. தற்போது காங்கிரஸ், திமுக வேறு நிலைப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது நாகரீகம் அற்றது” என்றார்.

மேலும், கூட்டணி கட்சிகளுக்கிடையே பிரிவு, சிக்கல்கள் தமிழ்நாட்டில் புதிதல்ல என்ற திருநாவுக்கரசர், அவரவர் வேலையை பார்க்கட்டும். ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொள்வது அவசியமில்லை என்றும் கூறினார். திருநாவுக்கரசரின் இந்தக் கருத்துக்கள், கூட்டணி அரசியலில் மரியாதை மற்றும் நாகரீகத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இதையும் படிங்க : த.வெ.க ரீல் அரசு.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com