DMK Alliance Weakness : சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தி.மு.க. கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
DMK Alliance Weakness : சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தி.மு.க. கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Published on: May 23, 2026 at 10:37 pm
சென்னை, மே 23, 2026: விசிக தலைவர் திருமாவளவன், “தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை” என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாகவும், அதை மு.க. ஸ்டாலின் அறிந்துள்ளார் எனவும் கூறினார். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து, கட்சித் தோழர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும் பேசிய அவர், “தவெக சார்பில், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. விசிக உயர்நிலை குழு கூட்டத்தில், பெரும்பான்மையான தோழர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கருத்து தெரிவித்தனர். ஆனால், திருமாவளவன், “நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரவையில் சேர விரும்பவில்லை; வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்.
என்னை துருப்புச் சீட்டாக..
“முன்னதாக, என்னை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல தரப்பினர் முயன்றனர். ஆனால் நான் உறுதியாக நின்றேன்; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவுகளை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர்” என்றார்.
எனது உரிமை
இதையடுத்து, “நாம் ஆதரவு வழங்கினாலும், இல்லாவிட்டாலும் அது எங்கள் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது” என திரு.மாவளவன் வலியுறுத்தினார். மேலும், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பப்படுவதை கண்டித்தார்.
மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு
“மு.க. ஸ்டாலின் எங்கும் ‘இவ்வாறு செய்யக்கூடாது’ என கூறவில்லை. தற்போதைய சூழலை அவர் அரசியல் பக்குவத்துடன் அணுகினார்” என பாராட்டினார். மேலும், விசிக வளர்ச்சியை விரும்பாதவர்கள் தொடர்ந்து காழ்ப்புணர்வுடன் தாக்குகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க : தமிழக அரசியலை லாட்டரி குடும்பம் ஆள்கிறது.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com