நிலவில் டீ குடிக்கலாம்.. செவ்வாயில் தோசை சாப்பிடலாம்.. சாதித்த ஸ்பேஸ்எக்ஸ்!

Starship V3 Takes Off : ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், “இது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய யுகம் தொடங்கும் தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published on: May 23, 2026 at 3:17 pm

நியூயார்க், மே 23, 2026: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய விண்கலமான ஸ்டார்ஷிப் V3-ஐ சோதனைப் பறப்பில் வெற்றிகரமாக ஏவியது. இது, ஸ்டார்ஷிப் தொடரின் மிகப்பெரிய பதிப்பு ஆகும். இந்நிலையில், பறப்பின் போது, விண்கலத்தின் புதிய வடிவமைப்பு மற்றும் சக்தி சோதிக்கப்பட்டது.

இந்த சோதனை, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் எதிர்கால திட்டங்களுக்கு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், V3 பதிப்பு, முந்தைய V2 மற்றும் V1 மாடல்களை விட அதிக திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் வெற்றி, மார்ஸ் மற்றும் சந்திரன் பயணங்களுக்கு வழிகாட்டும் என நம்பப்படுகிறது.

எலான் மஸ்க் கருத்து

ஸ்பேஸ்X நிறுவனர் எலான் மஸ்க், “இது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய யுகம் தொடங்கும் தருணம்” எனக் கூறினார். மேலும் அவர், ஸ்டார்ஷிப் V3-ஐ மனிதர்களை பல கோள்களுக்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்டதாகக் குறிப்பிட்டார். ஸ்டார்ஷிப் V3 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதால், நாசா ஆர்டெமிஸ் திட்டம் மற்றும் மார்ஸ் குடியேற்றம் போன்ற திட்டங்களுக்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இதன் அடுத்த கட்டமாக, முழுமையான மனிதர் பயண சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், விண்வெளி ஆராய்ச்சியில் ஸ்பேஸ்எக்ஸ்-இன் முன்னணி நிலை மேலும் வலுப்பெறுகிறத என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாவட்ட அளவில் புதுக்கோட்டை முதலிடம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com