Kayalvizhi visits secretariat : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேத்தியும், மு.க அழகிரியின் மகளுமான கயல்விழி முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேச தலைமை செயலகம் வந்தார்.
Kayalvizhi visits secretariat : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேத்தியும், மு.க அழகிரியின் மகளுமான கயல்விழி முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேச தலைமை செயலகம் வந்தார்.

Published on: May 22, 2026 at 8:31 pm
சென்னை, மே 22, 2026: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும், திமுக முன்னாள் எம்.பி. மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி, இன்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அவர் முதலமைச்சர் விஜயை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அலுவல் பணி காரணமாக விஜயை சந்திக்க முடியாமல், அமைச்சர்களை மட்டும் சந்தித்து பேசினார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு
காலை 11.20 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த கயல்விழி, பல்வேறு அமைச்சர்களை ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து உரையாடினார். மேலும், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே” என அவர் விளக்கம் அளித்தார்.
அரசியல் பின்னணி
முன்னதாக, 2026 சட்டமன்ற தேர்தலில், கயல்விழி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் மே 10 அன்று, விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில் கயல்விழி கலந்து கொண்டார்.
இதனால், அவர் தவெக (TVK) கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. அதிலும், குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் முக்கிய பதவி பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுக தொடர்பு
மு.க கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி பல ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் ஆதரவாளர்கள் பலரும் பிற கட்சிகளில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், கயல்விழியும் தவெகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்க வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க : என் வீட்டுத் தென்னை..எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்.. விசிக மீது ஆ. ராசா விமர்சனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com