TNEB : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
TNEB : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 21, 2026 at 6:27 pm
சென்னை, மே 21 2026: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) பசுமை எரிசக்தி திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஓய்வு பெற்ற இயக்குநர்களின் ஓய்வூதியமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (TNGECL) நிறுவனத்தில் பணியாற்றிய தலைமை பொறியாளர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்த பி. சந்திரசேகரன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மூத்த அதிகாரிகளின் அனுமதி மற்றும் தகவல் இல்லாமல் சோலார் மற்றும் காற்றாலை மின்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் TNEB தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணனும் பங்கேற்றிருந்தார். இந்த கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதன் பின்னரே இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த பசுமை எரிசக்தி திட்டங்களில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஓய்வு பெற்ற சில முன்னாள் இயக்குநர்களின் ஓய்வூதிய பலன்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க அமைச்சரான முன்னாள் சபாநாயகரின் மகன்.. யார் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com