தனியுரிமையை பாதுகாக்கும் புது அப்டேட்.. வாட்ஸ்அப்பில் புதிய வசதி?

Whatsapp Update: வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: May 21, 2026 at 2:44 pm

சென்னை, மே 21 2026: உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையை மேலும் அதிகரிக்கும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த புதிய வசதிக்கு “After Reading” என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்கள், பயனர் விரும்பினால் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்கு பிறகு தானாக மறையும் “Disappearing Messages” வசதி உள்ளது. ஆனால், புதிய அப்டேட்டில் ஒரு மெசேஜ் படிக்கப்பட்ட உடனேயே அல்லது குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் தானாகவே அழியும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

வாட்ஸ் அப் அப்டேட்கள் குறித்து தொடர்ந்து தகவல் வெளியிட்டு வரும் WABetaInfo இந்த புதிய வசதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புதிய வசதி தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்த அம்சம் அறிமுகமானால், பயனர் அனுப்பும் தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள், ஓடிபி எண்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை நீண்ட நேரம் சேமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதியின் முக்கிய அம்சமாக, ஒரு மெசேஜ் படிக்கப்பட்ட பிறகு சுமார் 15 நிமிடங்களில் அது தானாகவே அழிந்து விடும் என கூறப்படுகிறது. மேலும், பெறுபவர் அந்த மெசேஜை திறக்காமல் இருந்தால், 24 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே மறைந்து விடும் வசதியும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வாட்ஸ் அப்பில் “View Once” என்ற அம்சம் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் வசதி உள்ளது. தற்போது அதேபோன்ற பாதுகாப்பை டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கும் கொண்டு வர வாட்ஸ் அப் முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தனிப்பட்ட தகவல்களை அதிக நம்பிக்கையுடன் பகிர முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த அம்சம் எப்போது அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும் என்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

இதையும் படிங்க : நீட் மறுதேர்வு.. மாணவ- மாணவியருக்கு இப்படி ஓர் வாய்ப்பா? செக் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com