U-18 Men’s Hockey : 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
U-18 Men’s Hockey : 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

Published on: May 21, 2026 at 3:51 pm
போபால், மே 21 2026: 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 4-வது மற்றும் கடைசி ஹாக்கி போட்டியான இந்த போட்டி நேற்று போபால் உத்தவ் தாஸ் மேத்தா (பாய் ஜி) சென்ட்ரல் SAI சென்டர் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த முடிவின் மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஆண்கள் அணி ஒரு வெற்றி, 2 டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் தொடரை நிறைவு செய்தது. போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ஆரம்பத்தில் 2 கோல்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது பகுதியில் சமநிலை கோலை அடித்து ஆட்டத்தை 2-2 என மாற்றியது.
மூன்றாவது காலாண்டில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், இந்தியா மீண்டும் ஒரு பீல்ட் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும், ஆட்டம் முடிவடைய இன்னும் 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது ஆஸ்திரேலியா மீண்டும் சமநிலை கோலை அடித்து போட்டியை டிராவாக மாற்றியது. இந்திய அணிக்காக கேப்டன் கேதன் குஷ்வாஹா, கரண் கௌதம் மற்றும் பென் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
முன்னதாக நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 4-வது மற்றும் கடைசி போட்டியில், இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்திய கேப்டன்ஸ்வீட்டி குஜேர் அதற்கு பதிலடி கொடுத்து சமநிலை கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது பகுதியில் தியா ஒரு கோல் அடித்து இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இடைவேளைக்குப் பிறகும் இந்திய அணி ஆதிக்கத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியது. மூன்றாவது பகுதியில் பிரியங்கா மின்ஸ் கோல் அடித்தார். பின்னர் இறுதி காலண்டில் நௌஷீன் நாஸ் மேலும் ஒரு கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய பெண்கள் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிங்க : ஷமி பற்றி அகர்கர் இப்படி பேசலாமா? ஜஸ்ப்ரீத் பும்ராவை இப்படிதான் நடத்துவீர்களா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com