Karuppu Box Office : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இணைந்துள்ளது.
Karuppu Box Office : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இணைந்துள்ளது.

Published on: May 21, 2026 at 10:58 am
சென்னை, மே 21, 2026: ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா- திரிஷா காம்பினேஷனில் திரையில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
கருப்பு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் வெளியான 6 நாட்களிலேயே ₹100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது. வார இறுதி வெற்றிக்குப் பிறகு, வாரத்தின் நடுப்பகுதியில் சிறிய சரிவு இருந்தாலும், படம் இந்தியாவில் ₹105.35 கோடி நிகர வசூலை எட்டியுள்ளது.
6 நாட்களில் வசூல் நிலவரம்
கருப்பு படம் வெளியான முதல் நாளில் ₹15.50 கோடியும், இரண்டாம் நாளில் ₹24.15 கோடியும், மூன்றாம் நாளில் ₹28.35 கோடியும் வசூல் வேட்டை நடத்தியது. தொடர்ந்து, நான்காம் நாள் திங்கள்கிழமை ₹14.30 கோடியும், ஐந்தாம் நாளில் ₹12.75 கோடியும், ஆறாம் நாளில் ₹10.30 கோடியும் வசூலித்துள்ளது.
மொத்த வசூல்
இந்திய அளவில் படத்தின் மொத்த நிகர வசூல் ₹105.35 கோடியாக காணப்படுகிறது. அதேநேரம், இந்திய அளவில் ஒட்டுமொத்த வசூல் ₹119.64 கோடியாக காணப்படுகிறது. மேலும், உலகளாவிய வசூலுடன் பார்க்கும்போது படம், ₹175.96 கோடி வசூலித்துள்ளது.
இந்த நிலையில், ‘கருப்பு’ படம் சூர்யாவின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி எனக் கருதப்படுகிறது.அவரது முந்தைய படங்கள் எதற்கும் துணிந்தவன் (₹49.10 கோடி), கங்குவா (₹70.37 கோடி), ரெட்ரோ (₹60.58 கோடி) ஆகியவற்றின் வாழ்நாள் வசூலை ‘கருப்பு’ 6 நாட்களிலேயே மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அட நம்ம ரகுல் ப்ரீத் சிங் டீ பிரியரா? ஆனாலும் இது ரொம்ப ஓவர்ங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com