கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்.. ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!

Koyambedu Bus Demand : சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published on: May 20, 2026 at 1:19 pm

சென்னை, மே 20, 2026: சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. பயணிகள் நலன், விலை வேறுபாடுகள் மற்றும் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும் சங்கம் வலியுறுத்தியது.

த.வெ.க அரசுக்கு வாழ்த்து

அப்போது, தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஆம்னி பேருந்துகள் 70% தேவையை பூர்த்தி செய்கின்றன என குறிப்பிடப்பட்டது.

மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையம்

தென்தமிழ்நாட்டிற்கு செல்லும் பயணிகள் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக மட்டுமே பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் வடசென்னை மற்றும் மத்திய சென்னை மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் ஒருங்கிணைந்த மையமாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

டிக்கெட் வேறுபாடு புகார்

வாகனங்களில் பொருத்தப்படும் VLTD (AIS-140) சாதனங்கள் தமிழகத்தில் ரூ.14,000–18,000 வரை விற்கப்படுகின்றன; அண்டை மாநிலங்களில் ரூ.6,000–7,000 மட்டுமே உள்ளன. அதேபோல், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் வெளிச்சந்தையில் ரூ.1,500-க்கு கிடைக்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ரூ.4,000-க்கு விற்பனை செய்கின்றன.

இதுகுறித்து அரசு விசாரணை செய்து, நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என சங்கம் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கை

மேலும், ஏ.ஐ.டி.சி (AITP) அனுமதி பெற்ற அண்டை மாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும் போது, சில அதிகாரிகள் மீண்டும் மாநில சாலை வரி செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் பயணிகள் தாமதம் மற்றும் சிரமம் அனுபவிக்கின்றனர். இந்தத் தேவையற்ற சோதனைகள் மற்றும் தவறான நடவடிக்கைகளை தடுக்க, அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாவட்ட அளவில் புதுக்கோட்டை முதலிடம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com