Kadambankulam to Samithoppu : சாமிதோப்பு வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு, திருக்கொடிக்கயிறு மற்றும் திருக்கொடிப்பட்டம் பாதயாத்திரையாக கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் நிழற்தாங்கலில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது.
Kadambankulam to Samithoppu : சாமிதோப்பு வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு, திருக்கொடிக்கயிறு மற்றும் திருக்கொடிப்பட்டம் பாதயாத்திரையாக கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் நிழற்தாங்கலில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது.

Published on: May 20, 2026 at 12:25 pm
Updated on: May 20, 2026 at 1:00 pm
திருநெல்வேலி, மே 20, 2026: அய்யா வைகுண்டர் வைகாசி திருவிழா கொடிபட்டம் சாமித்தோப்புக்கு நடந்தே கொண்டு செல்லும் மரபு இன்று மீண்டும் தொடங்கியது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கடம்பன்குளத்தில் இருந்து கொடிபட்டம் சுமந்து செல்லும் நிகழ்வு பக்தர்களின் உற்சாகத்துடன் நடைபெற்றது.
அதன்படி, இன்று (மே 20, 2026) காலை கடம்பன்குளத்தில் உள்ள அய்யா தாங்கலில் சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. அதன் பின் பணிவிடைகாரர்கள் அய்யா வைகுண்டரின் திருநாமத்தை உச்சரித்தபடி திருக்கொடிபட்டம் மற்றும் திருக்கொடிக்கயிரை சுமந்து சென்றனர். இந்தக் திருக்கொடிபட்டம் மற்றும் திருக்கொடிக்கயிறு பாதயாத்திரை பணகுடி, காவல்கிணறு, அஞ்சுகிராமம் மற்றும் பொற்றையடி வழியாக சாமித்தோப்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பாதயாத்திரை நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக பாடல்கள் பாடி, வழிபாடுகளுடன் பயணத்தில் இணைந்தனர்.
சாமிதோப்பில் கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மரபு, அய்யா வைகுண்டர் ஆன்மீக பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா..21-ந்தேதி கொடியேற்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com