Kanyakumari: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Kanyakumari: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Published on: May 14, 2026 at 12:35 pm
கன்னியாகுமரி, மே 14 2026: கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவிழாவின் ஒரு பகுதியாக, பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேளதாளங்கள் முழங்க நடைபெறும் இந்த வாகன பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.
அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தங்கக் கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
திருவிழாவை முன்னிட்டு கொடிப்பட்டம் மற்றும் கொடி மரக்கயிறு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்படும். குறிப்பாக மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் மேளதாளங்களுடன் கொடி மரக்கயிறை ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் ஒப்படைப்பர்.
29ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9-ம் நாள் காலை திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் நாள் காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருடத்தில் ஐந்து முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அந்த வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : திமுக அலறப்போவது உறுதி … முதலமைச்சர் விஜய்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com