ரோம் நகரில் பிரதமர் மோடி.. வைரலாகும், “Melodi” சந்திப்பு!

Rome Reunion : பிரதமர் நரேந்திர மோடியின் ரோம் நகர சந்திப்பு பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

Published on: May 20, 2026 at 12:27 pm

புதுடெல்லி, மே 20, 2026: ரோம் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி சந்திப்பு மீண்டும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “Melodi” என அழைக்கப்படும் இவர்களின் நட்பு, அழகிய புகைப்படங்களுடன் உலகளவில் வைரலாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் இறுதி கட்டமாக ரோம் நகரை அடைந்தார். அங்கு அவர் ஜோர்ஜியா மெலோனியால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

இந்நிலையில், மெலோனி தனது சமூக வலைதளத்தில் “ ரோம் நகருக்கு வரும் எனது நண்பரை வரவேற்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மெலோனி இரவு விருந்தில் கலந்துகொண்டதுடன், கொலோசியம் எனும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னத்தை பார்வையிட்டனர். அங்கு இருவரும் பல்வேறு தலைப்புகளில் உரையாடல் நடத்தினார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

மேலும், மோடி–மெலோனி நட்பு இணையத்தில் “Melodi” என அழைக்கப்படுகிறது. இருவரும் இதனை நகைச்சுவையுடன் ஏற்றுக்கொண்டு, பல முறை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த முறை வெளியான புகைப்படங்களும் மீண்டும் வைரலாகி, உலகளவில் கவனம் ஈர்த்துள்ளன.

இந்நிலையில், தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம், வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஸ்டார்ட்அப் சூழல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

இதையும் படிங்க : மோடியை பாம்பாட்டியாக சித்தரிப்பு.. நார்வே பத்திரிகை இனவெறி கார்ட்டூன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com