வாடா வாடா தோழா.. ரூ.100 கோடியை நெருங்கும் கருப்பு.. ஹேப்பி சூர்யா!

Suriya’s Karuppu Hits ₹93 Cr : கருப்பு படம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்துள்ளது; படம் வெளியான 5ஆம் நாளில் ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டது.

Published on: May 20, 2026 at 10:19 am

சென்னை, மே 20, 2026: சூர்யா – திரிஷா நடிப்பில் வெளியான கருப்பு படம், 5வது நாளில் இந்தியாவில் ₹93.72 கோடி நிகர வசூலை எட்டியுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ₹108.77 கோடியாக உள்ளது. படம் வார இறுதி பாக்ஸ்ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வார நாட்களிலும் நிலைத்திருக்கிறது.

இந்தப் படம் வெளியான முதல் நாளில் ரூ.15.50 கோடியும், 2ஆம் நாள் சனிக்கிழமை ரூ.24.15 கோடி வசூலும், 3ஆம் நாளில் ரூ.28.35 கோடி வசூலும், 4ஆம் நாளில் ரூ.14.30 கோடி வசூலும் பெற்றது. இந்த நிலையில், 5ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (மே 19, 2026) ரூ.11.42 கோடி வசூலித்துள்ளது. அதன்படி இந்தியாவில் நிகர வசூல் ரூ.93.72 கோடியும், இந்திய அளவில் மொத்த வசூல் ரூ.108.77 கோடியாகவும் காணப்படுகின்றது.

இந்தப் படத்தில் சூர்யாவின் கருப்பசாமி அவதாரம் ரசிகர்களை புதிய பரிணாமத்துக்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், திரிஷா நடித்த காட்சிகளும், ஆர்.ஜே பாலாஜி இயக்கிய புராணம் கலந்த ஆக்ஷன் டிராமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை பொறுத்தமட்டில் தமிழ் பதிப்பு மிக வலுவாக ஓடுகிறது; தெலுங்கு பதிப்பு சற்று குறைவாக உள்ளது.

மேலும், நடிகர் சூர்யாவின் இதற்கு முன்பு வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட படங்களின் வசூலை கருப்பு ஏற்கனவே மிஞ்சிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பஞ்சாப் பாடகி கொலை? கனடா தப்பிய குற்றவாளி.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com