ஆசியப் போட்டிகளில் பங்கேற்பது கடினம்.. நிவாரணம் இல்லை, சிக்கலில் வினேஷ் போகத்!

No HC Nod for Vinesh : பிரபல மல்யுத்த வீராங்கனை வினேத் போகத், ஆசிய போட்டிகளில் பங்கேற்பது கடினமாகியுள்ளது.

Published on: May 20, 2026 at 10:48 am

புதுடெல்லி, மே 20, 2026: பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மே 30–31 தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அவர் மீது இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யூ.எஃப்.ஐ) விதித்த தடை காரணமாக உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மே 30–31 நடைபெறும் ஆசிய விளையாட்டுத் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கோரினார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் கருத்தை கேட்காமல் உடனடி நிவாரணம் வழங்க முடியாது” என உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனம் விதித்த தடை காரணமாக அவர் ஜூன் 26 வரை உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது. மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனம் வினேஷ் மீது ஒழுங்கின்மை மற்றும் ஆண்டி-டோப்பிங் விதிமுறை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

முன்னதாக, வினேஷ் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஜூலை 2025ல் குழந்தை பெற்ற பிறகு, டிசம்பர் 2025ல் மீண்டும் விளையாட்டிற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தீபிகா குமாரி இல்லை.. ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com