இத்தாலியன் ஓபன் 2026.. ஜானிக் சின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி!

Italian Open Final 2026: இத்தாலியன் ஓபன் 2026 டென்னிஸ் போட்டியில், ஜானிக் சின்னர் அபார வெற்றிப் பெற்றார்.

Published on: May 17, 2026 at 3:17 pm

ரோம், மே 17, 2026: இத்தாலியன் ஓபன் 2026 ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலக நம்பர் 1 ஜானிக் சின்னர், ரஷ்யாவின் டானியல் மெட்வெடெவ் மீது 6-2, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட அரையிறுதி போட்டி மறுநாள் தொடர்ந்தபோது, சின்னர் தன்னுடைய நம்பிக்கையையும் ஆட்டத்தையும் நிலைநிறுத்தி வெற்றியை உறுதி செய்தார்.

சின்னர் vs மெட்வெடெவ் மோதிய போட்டியில், முதல் செட்டை சின்னர் (6-2) என்ற கணக்கில் எளிதாக வென்றார். இந்நிலையில், இரண்டாவது செட்டில் மெட்வெடெவ் 12வது கேமில் பிரேக் செய்து 7-5 என வென்றார். தொடர்ந்து, மூன்றாவது செட்டில் சின்னர் 4-2 முன்னிலையில் இருந்தபோது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மறுநாள் தொடர்ந்தபோது, சின்னர் 6-4 என வெற்றி பெற்றார்.

இத்தாலியன் ஓபன் பட்டம்

1976-இல் அட்ரியானோ பனாட்டா வென்ற பிறகு, சின்னர் வென்றால் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இத்தாலிய வீரராக பட்டம் பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய மகளிர் ஹாக்கியில் புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு.. சலிமா பேட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com