முதலமைச்சர் விஜய் உட்பட யார் யாருக்கு என்ன துறை? தமிழக அமைச்சரவை முழு லிஸ்ட்!

Joseph Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சர்களுக்குரிய துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published on: May 16, 2026 at 7:05 pm

சென்னை, மே 16 2026: தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்ற பிறகு, 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், ஆளுநர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னரகவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு பொது நிர்வாகம், IAS, IPS,IFS, DRO, காவல்துறை, உள்துறை, மகளிர், இளைஞர் நலன், குழந்தைகள், முதியவர்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், சிறப்புத் திட்ட அமலாக்கம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகத் துறை அறிவிக்கப்பட்டுள்ளன.

  • முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை
  • அமைச்சர் என்.ஆனந்த்-க்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் அருண் ராஜூக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கீடு
  • அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம், எரிசக்தி, சட்டம் மற்றும் சிறைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவுத்துறை
  • அமைச்சர் கீர்த்தனாவிற்கு தொழில்துறை
  • அமைச்சர் பிரபுக்கு கனிம வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விஜய் செய்தியாளர் சந்திப்பு கட்டாயம் இல்லை.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

80-வது சுதந்திர தினம்: ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் விஜய்
Flag Hoisting

80-வது சுதந்திர தினம்: ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com