Virat Kohli: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.
Virat Kohli: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.

Published on: May 14, 2026 at 12:54 pm
Updated on: May 14, 2026 at 12:55 pm
ராய்ப்பூர், மே 14 2026: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி வரலாற்றுச் சாதனைகள் பலவற்றை படைத்தார்.
அவர் 60 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார். இது அவரது 9-வது ஐபிஎல் சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை மேலும் வலுப்படுத்தினார்.
மேலும் இந்த இன்னிங்ஸின் போது விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதேசமயம் இந்த மைல்கல்லை மிக வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்து, கிரிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் 400 ரன்களையும் கடந்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி 71 ரன்களும், ரின்கு சிங் ஆட்டமிழக்காமல் 49 ரன்களும் எடுத்தனர்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணிக்காக கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலிஆட்டநாயகன் விருதும் பெற்றார். மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும் அந்த அணி பிளேஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.
இதையும் படிங்க: ரோம் டையமண்ட் லீக்.. நீரஜ் சோப்ரா பெயர் மிஸ்ஸிங்.. யார் இந்த சச்சின் யாதவ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com