Astrologer OSD Row : தமிழக முதலமைச்சர் சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து ஜோதிடர் ரிக்கி நீக்கப்பட்டுள்ளார்.
Astrologer OSD Row : தமிழக முதலமைச்சர் சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து ஜோதிடர் ரிக்கி நீக்கப்பட்டுள்ளார்.

Published on: May 13, 2026 at 3:38 pm
சென்னை, மே 13, 2026: தமிழக அரசியல் சர்ச்சையின் மையமாக இருந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல், முதலமைச்சர் விஜயின் சிறப்பு அலுவலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு, கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பும், பொதுமக்களின் விமர்சனங்களும் காரணமாக எடுக்கப்பட்டது. முன்னதாக, மே 12, 2026 அன்று முதலமைச்சர் விஜயின் அரசியல் சிறப்பு அலுவலர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக 24 மணி நேரத்தில் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடரின் பின்னணி
ஜோதிடர் ரிக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஜோதிடர் ஆவார். இவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நிலையில், 2026 தேர்தலுக்கு முன், “விஜய்க்கு சுனாமி வெற்றி” கிடைக்கும் என கணித்தார். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளர் மற்றும் விஜயின் நெருங்கிய நம்பிக்கையாளர் ஆனார்.
இந்த நிலையில் இவரின் நியமனம், தமிழகத்தின் நீண்டகால அரசியல் கலாச்சாரத்துக்கு முரணானது என விமர்சிக்கப்பட்டது. மேலும், புதிய அரசு மீது முதல் பெரிய சர்ச்சை எனக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய் அரசு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.. யார் அந்த 144 எம்.எல்.ஏ.க்கள்? தி.மு.க. நிலைபாடு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com