விஜய் அரசு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.. யார் அந்த 144 எம்.எல்.ஏ.க்கள்? தி.மு.க. நிலைபாடு என்ன?

144 MLAs Back Vijay : தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில், விஜய் அரசு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.

Published on: May 13, 2026 at 2:21 pm

சென்னை, மே 13, 2026: தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. எதிர்க்கட்சியான தி.மு.க வாக்கெடுப்புக்கு முன் வெளியேறியது; அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு விவரம்

மொத்த ஆதரவு: 144 எம்.எல்.ஏ.க்கள்
எதிர்ப்பு: 22 எம்.எல்.ஏ.க்கள்
நடுநிலை: 5 எம்.எல்.ஏ.க்கள் (பா.ம.க, பா.ஜ.க)

ஆதரவு அளித்த கட்சிகள்

தமிழக வெற்றிக் கழகம் – 105 எம்.எல்.ஏ.க்கள்
அ.தி.மு.க பிளவு – 25 எம்.எல்.ஏ.க்கள்
காங்கிரஸ் – 5 எம்.எல்.ஏ.க்கள்
இந்திய கம்யூனிஸ்ட் – 2 எம்.எல்.ஏ.க்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 எம்.எல்.ஏ.க்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2 எம்.எல்.ஏ.க்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி – 2 எம்.எல்.ஏ.க்கள்
அ.ம.மு.க. – 1 எம்.எல்.ஏ (எஸ். காமராஜ்)

இதில், தி.மு.க.வை பொறுத்தமட்டில் வாக்கெடுப்புக்கு முன் வெளியேறியது; மேலும், ஜனாதிபதி ஆட்சி அமலாவதை தடுக்க தனது கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் விஜய்க்கு ஆதரவளித்தன என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறினார்.

இதற்கிடையில், விஜய் அரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, தமிழக அரசியலில் புதிய அதிகார சமநிலையை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தி.மு.க.-வின் விலகல், சிறிய கட்சிகளின் ஆதரவு ஆகியவை விஜயின் அரசை வலுப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய்க்கு நாலாபுறமும் பெருகும் ஆதரவு.. மன்னார்குடி எம்.எல்.ஏ முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வரை.. பரபரக்கும் தமிழக அரசியல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com