முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு!

Vijay Meets Stalin : முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்.

Published on: May 11, 2026 at 6:40 pm

சென்னை, மே 11, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலினை இன்று (திங்கள்கிழமை) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். மு.க ஸ்டாலின் வீடு தேடிச் சென்ற முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார்.

இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து, முதலமைச்சர் விஜய் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.. முத்தான மூன்று திட்டங்களில் முதல் கையெழுத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com