ஆள விடுங்க சாமி.. அரசியலை விட்டு ஓட்டம் பிடித்த நடிகர்!

West Bengal: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின் அரசியலை விட்டு வெளியேறினார் நடிகர் ராஜ் சக்ரவர்த்தி.

Published on: May 8, 2026 at 9:20 pm

கொல்கத்தா, மே 8, 2026: பிரபல திரைப்பட இயக்குநரும் அரசியல்வாதியுமான ராஜ் சக்ரவர்த்தி, 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அவர், தனது அரசியல் பயணம் குறுகிய காலமாக இருந்தாலும், மக்களிடமிருந்து பெற்ற அனுபவம் மதிப்புமிக்கதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி

2026 சட்டமன்றத் தேர்தலில், அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இதனால், தனது அரசியல் பயணத்தை நிறுத்தி, மீண்டும் திரைப்பட உலகில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், “அரசியலில் நான் செய்த முயற்சிகள் மக்களுக்காக இருந்தன, ஆனால் இப்போது என் பாதையை மாற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து

இந்நிலையில், ராஜ் சக்ரவர்த்தி, தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அரசுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். “மக்களின் நலனுக்காக புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும். நான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்.
மேற்கு வங்கத்தின் பாரக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜ் சக்கரவர்த்தி, பா.ஜ.க. வேட்பாளர் கௌஸ்துவ் பாக்ஷியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாலிவுட் தென்னிந்திய நடிகர்களை மதிக்கவில்லை.. சிம்ரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com