Summer: வாட்டி வதைக்கும் இந்த கோடை வெயிலில் உடலுக்கு தேவையான சரியான நீர்ச்சத்து பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
Summer: வாட்டி வதைக்கும் இந்த கோடை வெயிலில் உடலுக்கு தேவையான சரியான நீர்ச்சத்து பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

Published on: May 8, 2026 at 1:37 pm
சென்னை, மே 8, 2026: இந்த கோடைக்காலத்தில் சரியான முறையில் நீர்ச்சத்து பெறுவது மிகவும் அவசியம். வெறும் குளிர்ந்த பானங்கள் போதாது; அதிக சர்க்கரை, கஃபீன் உள்ள பானங்கள் உடலை சோர்வடையச் செய்து நீரிழப்பை அதிகரிக்கலாம். அதற்கு பதிலாக தண்ணீர், தேங்காய் நீர், எலுமிச்சை நீர் போன்ற இயற்கையான பானங்கள் உடலுக்கு சக்தி தரும்.
தவிர்க்க வேண்டிய பானங்கள்
பேக்கேஜ் பழச்சாறு: அதிக சர்க்கரை, குறைந்த நார்ச்சத்து; உடனடி சக்தி வீழ்ச்சி ஏற்படும்.
தேநீர்: அதிக சர்க்கரை, கஃபீன்; நீரிழப்பை அதிகரிக்கும்.

புரோட்டீன் ஷேக் – செரிமானம் கடினம்; உடல் சூடு, சோர்வு ஏற்படும்.
குளிர்பானங்கள் – அதிக சர்க்கரை; மற்றும் சோர்வு கொடுக்கும்.
பரிந்துரைக்கப்படும் பானங்கள்
தண்ணீர்: தினமும் 3–4 லிட்டர் வரை தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.
தேங்காய் நீர்: இயற்கையான எலக்ட்ரோலைட்கள்; உடனடி சக்தி தரும்.

எலுமிச்சை நீர்: வைட்டமின் சி, உப்புச்சத்து; உடல் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும்.
மூலிகை நீர்: புதினா, வெள்ளரிக்காய் சேர்த்து குடிப்பது புத்துணர்ச்சி தரும்.
இதையும் படிங்க : கோடைகாலத்தில், ‘பிங்க் கண்’ பாதிப்பு.. தவிர்ப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com