Electronic Gold Receipts: தங்கச் சந்தையை முறைப்படுத்த தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) மின்னணுத் தங்க ரசீதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Electronic Gold Receipts: தங்கச் சந்தையை முறைப்படுத்த தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) மின்னணுத் தங்க ரசீதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: May 6, 2026 at 6:54 pm
மும்பை, மே 6, 2026: இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE) தங்க சந்தையில் வெளிப்படைத்தன்மை, திறன் மற்றும் முறையான நடைமுறைகளை கொண்டு வருவதற்காக புதிய பிரிவாக “எலக்ட்ரானிக்ஸ் கோல்டு ரசீதுகள் (EGRs)” அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில், இ.ஜி.ஆர் என்பது டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கும் பத்திரங்கள் ஆகும். அவை, செபியால் அங்கீகரிக்கப்பட்ட வால்ட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் உரிமையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
அந்த வகையில், ஒவ்வொரு EGR-க்கும் உண்மையான தங்க ஆதாரம் உள்ளது; பங்குச் சந்தையில் பரிமாற்றம் செய்யலாம். மேலும், முதலீட்டாளர்கள் சிறிய அளவிலான தங்கத்தையும் டிஜிட்டல் வடிவில் வைத்திருக்க முடியும்; தேவையெனில் அதை மீண்டும் உடனடியாக உண்மையான தங்கமாக மாற்றவும் முடியும்.
இதன் மூலம் விலை கண்டறிதல் எளிதாகும்; நகைக்கடைகள், சுத்திகரிப்பாளர்கள், வர்த்தகர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு நம்பகமான சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி.. மூடிஸ் நிறுவனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com