Nagercoil Post Office Scam : நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Nagercoil Post Office Scam : நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published on: April 26, 2026 at 12:42 pm
நாகர்கோவில், ஏப்.26, 2026; நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, கடந்த சில நாள்களாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், அவர்களது கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது, புகாரின் அடிப்படையில், தபால் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் முகாமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்து ரசீதுகள் கணினிப் பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், சந்தேகத்திற்குரிய பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்களிடம் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முழுமையான தணிக்கைக்குப் பின்னரே சரியான தொகை எவ்வளவு என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் பணம் தொடர்பான பதற்றத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 முதல் 6 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு.. உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.. வெள்ளை மாளிகையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com