நிர்வாண வீடியோகால்.. ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல்.. யார் அந்த இன்ஸ்டாகிராம் அழகி?

Social Media Case in Coimbatore : இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோகால் பேசிய நிலையில், மாணவரிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Published on: April 26, 2026 at 12:38 pm

கோவை, ஏப்.26, 2026: கோவையை சேர்ந்த 19 வயதான மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோகாலில் பேசியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாணவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மேலும், அந்த மாணவரின் நிர்வாண படங்களும் வெளியாகியுள்ளன.

இதனால் அதிர்ச்சியுற்ற அந்த மாணவர் செய்வதறியாமல் தவித்துள்ளார். இதற்கிடையில் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டு எதிர்முனையில் இளைஞர் ஒருவர் பேசியுள்ளார்.
இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த மாணவர் ரூ.20 ஆயிரம் பணத்தை அனுப்பிவைத்துள்ளனர். இதற்கிடையில் மீண்டும் மீண்டும் அந்த இளைஞர், மாணவரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் தனது நண்பர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன், இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் அழகி மற்றும் இளைஞர் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு.. முழு விவரம்!

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு! Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com