Kharge Urges Protection of Rights : அரசியலமைப்பு ‘சதித் தாக்குதலுக்கு’ உள்ளாகியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அம்பேத்கர் பாதுகாத்த ஒவ்வொரு உரிமையையும் பாதுகாப்போம் எனவும் சூளூரைத்தார்.
Kharge Urges Protection of Rights : அரசியலமைப்பு ‘சதித் தாக்குதலுக்கு’ உள்ளாகியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அம்பேத்கர் பாதுகாத்த ஒவ்வொரு உரிமையையும் பாதுகாப்போம் எனவும் சூளூரைத்தார்.

Published on: April 14, 2026 at 12:59 pm
புதுடெல்லி, ஏப்.14, 2026: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அரசியலமைப்புச் சட்டம் இன்று ஒரு “சதித் தாக்குதலை” எதிர்கொள்கிறது என்றும், அதன் முதன்மை சிற்பியால் நிலைநிறுத்தப்பட்ட விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளில், இந்தியாவிற்கு அதன் தார்மீக மற்றும் அரசியலமைப்பு ஆன்மாவை வழங்கிய, அந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவருக்கு நாங்கள் ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் கார்கே, அம்பேத்கரை இந்திய அரசியலமைப்பின் சிற்பி மட்டுமல்ல, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதியின் அயராத போராளி என்றும் விவரித்தார்.
“பாபாசாகேப் இந்திய அரசியலமைப்பின் சிற்பி மட்டுமல்ல, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதிக்கான ஒரு அயராத போராளியும் ஆவார். இந்த விழுமியங்கள்தான் இந்தியாவின் அடிப்படைக் கருத்தை வரையறுக்கின்றன” என்றார்.
மல்லிகார்ஜூன கார்கே ட்வீட்
On the birth anniversary of Babasaheb Dr B. R. Ambedkar, we bow with deep reverence to the visionary who gave India its moral and Constitutional soul.
— Mallikarjun Kharge (@kharge) April 14, 2026
Babasaheb was not just the architect of the Constitution of India, but a relentless warrior for Liberty, Equality, Fraternity… pic.twitter.com/CRimtlGSg9
தொடர்ந்து, “இன்று, அரசியலமைப்புச் சட்டம் ஒரு சதித் தாக்குதலை எதிர்கொள்ளும் வேளையில், அவரது வார்த்தைகளும் எச்சரிக்கைகளும் புது அவசரத்துடன் எதிரொலிக்கின்றன. இது தைரியத்தையும் உறுதியையும் கோரும் ஒரு தருணம்” என்றார்.
மேலும், “நாம் அவரை வெறுமனே நினைவுகூர்வதுடன் நின்றுவிடக்கூடாது; அவர் நிலைநாட்டிய ஒவ்வொரு கொள்கையையும் காக்கவும், அவர் உறுதிசெய்த ஒவ்வொரு உரிமையையும் பாதுகாக்கவும், அவர் வாழ்ந்து போராடிய ஒவ்வொரு விழுமியத்தையும் நிலைநிறுத்தவும் நாம் ஒன்றிணைய வேண்டும்,” என்றார்.
இதையும் படிங்க: அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவது இல்லை.. திசையன்விளையில் கனிமொழி பரபரப்பு பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com