‘நெருக்கடி சூழலில் ஆதரவு’.. இந்தியாவுக்கு ஈரான் நன்றி!

Iran Envoy in India: கடுமையான காலங்களில் ஆதரவு அளித்ததற்காக இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.

Published on: April 14, 2026 at 1:02 pm

புதுடெல்லி, ஏப்.14, 2026: இந்தியாவிற்கான ஈரான் தூதர் டாக்டர் முகமது ஃபத்தாலி, நெருக்கடியான காலங்களில் நம்பகமான மற்றும் இரக்கமுள்ள பங்காளிகளாக இருந்த இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் டாக்டர் ஃபத்தாலி, இந்த இக்கட்டான நேரத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததற்காகவும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவும் ஈரானும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், எதிர்காலத்திலும் இரு தரப்பினரும் நல்லுறவைத் தொடர்வார்கள் என்றும் தூதர் கூறினார்.

மேற்காசிய போர்

இதற்கிடையில், பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கை ஏதுமின்றி முடிந்தது. இதைத்தொடர்ந்து, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிட மறுத்தது.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12, 2026) அன்று, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியின் கப்பல் போக்குவரத்துப் பாதையைத் தடுக்குமாறு அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர், ஹோர்மூஸ் நீர்வழியில் போக்குவரத்து தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதை எதிர்க்க முயற்சிக்கும் எந்தவொரு எதிரியையும் “ஒரு கொடிய சுழலில்” சிக்க வைப்போம் என்றும் எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை!

மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று புதிய வெற்றி சிகரங்களை அடைவோம்.. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து! Narendra Modi

மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று புதிய வெற்றி சிகரங்களை அடைவோம்.. பிரதமர்


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com