அரசியல் செய்கிறாரா, அடிமையாக வாழ்கிறாரா.. தொல். திருமாவளவன் குறித்து விந்தியா!

Assembly Election 2026 : தொல் திருமாவளவன் அரசியல் செய்கிறாரா அல்லது அடிமையாக வாழ்கிறாரா என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகை விந்தியா கேள்வி எழுப்பி உள்ளார்.

Published on: April 10, 2026 at 11:59 am

சென்னை ஏப்ரல் 10 2026; தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது; இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும், 10 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த ஆட்சியை தக்க வைக்க திமுகவும் தீவிரமாக வேலை பார்க்கின்றன.

இதில் திமுக கூட்டணியில் தொல் திருமாவளவன் எம் பி யின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; இதில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவதாக இருந்தது.
அதாவது காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடப் போவதாக தொல் திருமாவளவன் முதலில் அறிவித்திருந்தார்; பின்னர் தனது அறிவிப்பிலிருந்து பின்வாங்கிய தொல் திருமாவளவன், தேசிய அரசியலில் மட்டும் கவனம் செலுத்த தீர்மானித்தார்.

இந்த நிலையில் தொல் திருமாவளவனின் திடீர் மனமாற்றத்திற்கு திமுக தான் காரணம் என அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சுமத்தின. குறிப்பாக உதயநிதிக்கு போட்டியாக தொல் திருமாவளவன் வந்து விடக்கூடாது என்பதற்காக அவரை மாநில அரசியல் பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த தொல் திருமாவளவன், யோசித்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தன்னை யாரும் வற்புறுத்த வில்லை எனவும் கூறி இருந்தார். மேலும் இந்த தேர்தலில் பாஜக உட்பட சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டும் எனவும் அவர் சூளுரைத்தார்.

இந்த நிலையில் பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய நடிகையும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான விந்தியா, ” விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை திமுக கூட்டணியினர் ‘சை டிஸ்’ ஆக பயன்படுத்துகிறார்கள்; திருமாவளவன் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறாரா அல்லது அடிமையாக வாழ்கிறாரா என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்” என்றார்.

இதையும் படிங்க; கள்ள மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்பவர் விஜய்.. தி.மு.க வேட்பாளர் அப்பாவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com