Food: சுவையான முட்டை கோஸ் கிரேவி இப்படி பண்ணுங்க.
Food: சுவையான முட்டை கோஸ் கிரேவி இப்படி பண்ணுங்க.

Published on: May 14, 2026 at 1:35 pm
சென்னை மே 14, 2026: சுவையான முட்டை கோஸ் கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முட்டை கோஸ் -½ கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 மேஜை கரண்டி
பெரிய வெங்காயம் -1
தக்காளி -2
கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
புதினா -சிறிதளவு
கருவேப்பிலை -2 கொத்து
பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி -½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் -½ தேக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மல்லி தூள் -2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2
உப்பு – தேவையான அளவு
கடலெண்ணை -2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் அதில் மசாலா பொருட்களை சேர்க்கவும். பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்து நன்றாக கிளறி அதில் கருவேப்பிலை,கொத்தமல்லி,புதினா இவை அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான முட்டை கோஸ் கிரேவி தயார்.
இதையும் படிங்க: முந்திரி மட்டன் வறுவல்.. இப்படி செஞ்சு அசத்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com