IPL 2026 : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
IPL 2026 : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Published on: April 3, 2026 at 1:37 pm
கொல்கத்தா, ஏப்.3, 2026: இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில், நேற்றிரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
227 ரன்கள் இலக்கை துரத்திய கே.கே.ஆர் அணி, 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
முன்னதாக, பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. ஹைன்ரிக் கிளாசன் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணிக்காக அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.
ஹைதராபாத் அணிக்காக ஜெயதேவ் உனட்கட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில், கொல்கத்தா அணிக்காக பிளெசிங் முஸாரபானி 4 விக்கெட்டுகள் பெற்றார். நிதிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவர் போட்டியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய போட்டி
இன்று, சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க:மும்பையில் ஐ.பி.எல் ஒளிபரப்பு என்ஜினீயர் மரணம்.. போலீஸ் விசாரணை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com