எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

MK Stalin: எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் இஸ்லாமியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி திமுக என மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: March 15, 2026 at 7:30 pm

Updated on: March 15, 2026 at 7:33 pm

சென்னை மார்ச் 15, 2026; இஸ்லாமியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி திமுக என அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இருக்கும் உறவு தலைமுறை கடந்தது; நம்மை யாராலும் பிரிக்க முடியாது” என்றார்.

மேலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து திமுகவின் பலமே பெண்கள் தான் எனக் கூறிய மு.க ஸ்டாலின், மகளிர் மையப்படுத்திய திட்டங்களை தீட்டி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் விதிகள் அமல்

தமிழ்நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன; ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. திமுகவை பொருத்தமட்டில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. பாஜக, அன்புமணி ராமதாஸின் பாமக, டிடிவி தினகரனின் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை எதிர்கொள்கிறது.

வழக்கம்போல் நாம் தமிழர் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் நிலை குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை; அந்தக் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. எனினும் கூட்டணி தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி.. சற்று நேரத்தில் முழு அட்டவணை!

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! MK Stalin

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com