Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்
Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்

Published on: March 15, 2026 at 3:40 pm
Updated on: March 15, 2026 at 9:04 pm
புதுடெல்லி, மார்ச் 15, 2026; இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. மேற்கு வங்காளம், கேரளம் (முன்னர் கேரளா), தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அட்டவணையை அறிவிக்கிறது.
இந்த சட்டமன்றங்களின் காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணியை இறுதி செய்ய தீவிரம் கட்டி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் காங்கிரஸும் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும் உள்ளன. நாம் தமிழர் தனித்து களம் காண்கிறது. தமிழக வெற்றி கழகம் தொடர்பான, அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
| வரிசை எண் | பொருள் | தேதி |
|---|---|---|
| 1 | வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் | மார்ச் 30 |
| 2 | வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் | ஏப்ரல் 6 |
| 3 | வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் | ஏப்ரல் 7 |
| 4 | வேட்புமனுக்கள் பரிசீலனை | ஏப்ரல் 9 |
| 5 | தேர்தல் தேதி | ஏப்ரல் 23 |
| 6 | வாக்கு எண்ணிக்கை | மே 4 |
இதையும் படிங்க; திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்.. வேல்முருகன் எம்.எல்.ஏ அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com