Food: சண்டே ஸ்பெஷல்லா சுவையான முந்திரி மட்டன் வருவல் இப்படி பண்ணுங்க.
Food: சண்டே ஸ்பெஷல்லா சுவையான முந்திரி மட்டன் வருவல் இப்படி பண்ணுங்க.

Published on: March 15, 2026 at 9:00 am
Updated on: March 14, 2026 at 6:41 pm
சென்னை, மார்ச் 15, 2026: சுவையான முந்திரி மட்டன் வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முந்திரி – 100கிராம்
மட்டன் – ¼ கிலோ
வெங்காயம்- 200 கிராம் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள்-2 டீஸ்பூன்
மிளகு தூள் – 2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் –
தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் முந்திரியை சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள், மஞ்சள் தூளுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அதன் பிறகு சுத்தம் செய்த மட்டன் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். மட்டன் நன்கு வெந்ததும் மிளகுத்தூளை தூவி கிளறி இறக்கினால் சுவையான முந்திரி மட்டன் வறுவல் ரெடி
இதையும் படிங்க மட்டன் சுவையில் காலிஃபிளவர் கோலா உருண்டை கிரேவி – இப்டி செஞ்சு பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com