கல்லூரி பேருந்து மீது மோதிய சரக்கு ரயில்.. 24 மாணவர்கள் காயம்.. கரூரில் பரபரப்பு!

Karur Train-Bus Crash : கரூரில் சரக்கு ரயில் கல்லூரி பேருந்து மீது மோதியதில் 24 மாணவர்கள் காயமடைந்தனர்.

Published on: March 15, 2026 at 10:42 am

கரூர், மார்ச் 15 2026;கரூரில் சரக்கு ரயில் கல்லூரி பேருந்து மீது, சனிக்கிழமை (மார்ச் 13, 2026) மோதியதில் 24 மாணவர்கள் காயமடைந்தனர். இது குறித்து, ரயில்வே வட்டாரங்கள், “இந்த சம்பவம் வீரராக்கியம் மற்றும் பாளையம் இடையிலான பாதையில் நடந்தது. இந்த பாதை கிளிங்கர் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தன.

கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் சுமார் 24 மாணவர்கள் காயமடைந்தனர். சனிக்கிழமை மாலை, சரக்கு ரயில், அந்த நிறுவனத்தின் பாதையில் அமைந்துள்ள ரயில் கடவை வழியாகக் கல்லூரி பேருந்து கடக்கும்போது மோதியது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த போலீசார் கூறுகையில், “சுமார் 50 மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து மாலை நேரத்தில் ஆளில்லாத இல்லாத ரயில் கடவை வழியாகக் கடக்க முயன்றபோது, சரக்கு ரயில் பேருந்துடன் மோதியது. திண்டுக்கலிலிருந்து கரூருக்கு வந்த ரயில், தொழிற்சாலைக்குச் சரக்குகளை எடுத்துச் சென்றது. சம்பவ இடத்துக்கு உள்ளூர் மக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்” என்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

இதையும் படிங்க; சட்டமன்றத்தில் குரல் கொடுக்க 10 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.. மார்க்சிஸ்ட் கே. பாலகிருஷ்ணன்!

விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து HC Closes Parthiban’s Certificate Case

விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com