2026 Assembly Election : காங்கிரஸூக்கு மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதித்துவம் குறித்து கனிமொழி எம்.பி.யிடம் பேசினேன் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
2026 Assembly Election : காங்கிரஸூக்கு மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதித்துவம் குறித்து கனிமொழி எம்.பி.யிடம் பேசினேன் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

Published on: February 23, 2026 at 9:48 pm
Updated on: February 24, 2026 at 12:54 am
சென்னை, பிப்.23, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியில் தேர்தல் தொகுதிப் பங்கீடு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று (திங்கள்கிழமை) கனிமொழியை சந்தித்துப் பேசினார். அப்போது 2026 சட்டமன்ற கூட்டணி மற்றும் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கிரிஷ் சோடங்கர், “2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி உடன்பாடு இன்னமம் எட்டப்படவில்லை” என்றார்.
மேலும், “மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்து நான் பேசினேன்” என்றும் கூறினார்.
ஆட்சியில் பங்கு
முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கோரியது. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஒத்துவராது என மு.க ஸ்டாலின் தட்டிக் கழித்துவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. 74 லட்சம் பெயர்கள் நீக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com