நாய் நக்கியதால் செப்சிஸ் தொற்று.. கை, கால் செயலிழப்பு.. மருத்துவர் எச்சரிக்கை!

Dogs Lick Leads to Sepsis: நாய் நக்கியதால் ஏற்பட்ட தொற்று குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

Published on: February 23, 2026 at 9:11 pm

சென்னை, பிப்.23, 2026: ஜெர்மனி நாட்டில் 52 வயது பெண் ஒருவர், தனது நாய் நக்கியதால் செப்சிஸ் (Sepsis) எனப்படும் கடுமையான தொற்றால் அனைத்து கைகளும் கால்களும் இழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

செப்சிஸ் என்றால் என்ன?

இந்த செப்சிஸ் தொற்று என்பது நாய் நக்குவதால் உடலில் ஏற்படும் தொற்று ஆகும். இந்தத் தொற்று, இரத்தத்தில் பரவி, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். மேலும், இது உயிருக்கு ஆபத்தானது, உடனடி சிகிச்சை தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

எப்போது ஆபத்து?

இந்தத் தொற்று பரவினால், காய்ச்சல், சுவாச சிரமம், குழப்பம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போது நாம் உஷாராகிவிட வேண்டும். ஏனெனில் இதற்கு மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால், பாதிப்புகள் பெரிய அளவில் இருக்கும். அதாவது, தொற்று விரைவாக பரவி, உடல் உறுப்புகளை பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மருத்துவர் மனோஜ் அறிவுரை

இது குறித்துப் பேசிய மருத்துவர் மனோஜ், “இந்தத் தொற்று ஏற்பட்டால் பயப்படாமல், முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். காயங்களை சுத்தமாக கழுவி பராமரிக்க வேண்டும்” என்றார். மேலும், “செல்லப்பிராணிகளுடன் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் சந்தேகமான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: 30 வயதில் நரை எட்டிப் பார்க்கிறதா? கூந்தல் கருகருவென வலிமையாக இருக்க வேண்டுமா?

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர் ஆர்மிடா?
First human milk bank

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com