TTV Dhinakaran: தி.மு.க.வின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
TTV Dhinakaran: தி.மு.க.வின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

Published on: February 23, 2026 at 11:30 am
சென்னை, பிப்.23, 2026: தி.மு.க.வின் குடும்ப கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரோத திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் – தமிழக மக்கள் விரும்பும் எம்.ஜி.ஆர்.ரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்!
வரும் 24.02.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெறும் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அ.ம.மு.க., அதி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக அரசின் தனியார் பல்கலைக்கழக மசோதா வாபஸ்.. பரபரப்பு தகவல்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com