TVK Arun Raj : மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) மூலமாக, பாரதிய ஜனதா அழுத்தம் கொடுக்கிறது; தி.மு.க கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு தோல்விதான் கிடைக்கும்” என த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் கூறினார்.
TVK Arun Raj : மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) மூலமாக, பாரதிய ஜனதா அழுத்தம் கொடுக்கிறது; தி.மு.க கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு தோல்விதான் கிடைக்கும்” என த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் கூறினார்.

Published on: February 20, 2026 at 1:30 pm
Updated on: February 20, 2026 at 4:16 pm
புதுடெல்லி, பிப்.20, 2026: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தே.மு.தி.க.வுக்கு தோல்விதான் கிடைக்கும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண் ராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தவறான முடிவு; அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும் தவெகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து பயந்து தேமுதிகவை சேர்த்துள்ளது” என்றார்.
சி.பி.ஐ மூலம் அழுத்தம்
முன்னதாக சி.பி.ஐ மூலமாக பாஜக அழுத்தம் தருகிறது எனவும் த.வெ.க நிர்வாகி அருண் ராஜ் கூறினார். இது குறித்து பேசிய அவர், “மத்திய பாஜக அரசு CBI உள்ளிட்டவை மூலம் இப்போதுதான் அழுத்தம் தர ஆரம்பித்துள்ளது பாஜக கொள்கை எதிரி என துணிச்சலாக அறிவித்தவர் விஜய்; ஜனநாயகன் பிரச்னை அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், “பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கவே முடியாது” எனவும் த.வெ.க நிர்வாகி அருண் ராஜா கூறினார்.
இதையும் படிங்க: தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க, மு.க ஸ்டாலின் ராஜ தந்திரம்.. தொல். திருமாவளவன் புகழாரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com