PhonePe IPO: இந்தியப் பங்குச் சந்தைகளில், போன்பே முதல் பங்கு வெளியீடு (IPO) குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
PhonePe IPO: இந்தியப் பங்குச் சந்தைகளில், போன்பே முதல் பங்கு வெளியீடு (IPO) குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: February 18, 2026 at 7:30 pm
மும்பை, பிப்.18, 2026: பின்டெக் துறை இன்னொரு பெரிய பங்குச் சந்தை வெளியீட்டுக்குத் தயாராகிறது. இந்நிலையில், இந்த வெளியீடு எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, மக்வாரி ரிசர்ச் (Macquarie Research) தனது சமீபத்திய அறிக்கையில், போன்பே ஐ.பி.ஓ பற்றிய பார்வையை வெளியிட்டுள்ளது. அதன்படி, போன்பே பட்டியலிடப்பட்டால், குறுகிய காலத்தில் Paytm பங்குகளுக்கு மறுமதிப்பீடு ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அறிக்கை கூறுவதென்ன?
இதற்கிடையில், போன்பே முதல் பங்கு வெளியீடு குறித்து மக்வாரி ரிசர்ச் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், போன்பே வருவாய் பங்கு, FY24-இல் 4% இருந்தது, FY26 முதல் பாதியில் 13% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், போன்பே மதிப்பீடு சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், $13–15 பில்லியன் எனக் கூறப்படுகிறது.
இதனால், மதிப்பீடு அடிப்படையில் குறுகிய காலத்தில் மறுமதீப்பீடு ஏற்படலாம். அந்த வகையில், போன்பே ஐ.பி.ஓ சந்தையில் புதிய உற்சாகத்தையும், பேடிஎம்-க்கு நேரடி தாக்கத்தையும் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: ரூ.122 முதல் ஐ.பி.ஓ முதலீடு.. இந்த வார புதிய வரவுகள்.. முழு பார்வை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com