முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் 40% சரிவு ஏன்?

Investor caution : மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

Published on: June 11, 2026 at 12:10 pm

மும்பை, ஜூன் 11, 2026: மே மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி வரவு கடுமையாகச் சரிந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய மாதாந்திர சரிவை பதிவு செய்துள்ளது.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் ₹38,440 கோடியாக இருந்த பங்குத் திட்டங்களுக்கான நிகர வரவு, மே மாதத்தில் 40.4% குறைந்து ₹22,908 கோடியாகக் குறைந்தது.
இது தொடர்பாக, அபக்கஸ் பரஸ்பர நிதியின் தலைமைச் செயல் அதிகாரி வைபவ் சுக், இந்தச் சரிவு முதலீட்டாளர்களின் எச்சரிக்கையைப் பிரதிபலிப்பதாகவும், இது சந்தை உணர்வில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் அல்ல, ஆரோக்கியமான ஒருங்கிணைப்பின் ஒரு கட்டம் என்றும் கூறினார்.

இதற்கிடையில், பங்குப் பிரிவுகள் அனைத்திலும் 27% முதல் 67% வரை வரவுகள் குறைந்தன. இந்நிலையில், ஃப்ளெக்ஸி-கேப் நிதிகள் மிகவும் விரும்பப்படும் பிரிவாகத் தொடர்ந்தன.

இந்த மாதத்தில் மட்டும் ₹5,176 கோடி நிகர முதலீட்டு வரவுகளை ஈர்த்தன. அதே சமயம், முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் (எஸ்.ஐ.பி) வலுவாகத் தொடர்ந்தன. மே மாதத்தில் எஸ்.ஐ.பி பங்களிப்புகள் வெறும் 0.52% குறைந்து ₹30,954 கோடியாக இருந்தது.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி-யின் ஏ. பாலசுப்ரமணியன், “எஸ்.ஐ.பி பங்களிப்புகள் முதலீட்டாளர்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் கூறினார். மிரே அசெட் மற்றும் கனரா ரோபெகோ நிறுவனங்களின் அதிகாரிகளும், எஸ்.ஐ.பி பங்களிப்புகள் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டனர்.

மே மாத இறுதியில் பரஸ்பர நிதித் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ₹81.58 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய மாதத்தை விட 0.42% குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டாடா அறக்கட்டளையில் என்ன நடக்கிறது? தொடரும் சர்ச்சை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com