தமிழ்நாட்டின் எஃகு மனிதர் மு.க ஸ்டாலின்.. கனிமொழி

Kanimozhi MP on MK Stalin: தமிழ்நாட்டின் எஃகு மனிதர் மு.க ஸ்டாலின் என கனிமொழி எம்.பி பாராட்டியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியை என்.டி.ஏ.வின் கிளை செயலாளர் எனவும் விமர்சித்தார்.

Published on: February 8, 2026 at 2:17 pm

விருதுநகர், பிப்.8, 2026: தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். தி.மு.க இளைஞரணி மாநாடு விருதுநகரில் சனிக்கிழமை (பிப்.7, 2026) நடைபெற்றது.

மு.க. ஸ்டாலின் பேச்சு

இந்த மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின், “எல்லா ரேங்குகளிலும் தமிழ்நாடுதான் டாப்; சூப்பர் ஸ்டார்; அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேற்றம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நாம் செய்தது போல சாதனைகளை 5 ஆண்டுகளில் செய்தது உண்டா?” எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும், “வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை திட்டங்கள், பயனாளிகள் இருக்க முடியாது என கெத்தாக சொல்லலாம்” எனக் கூறிய கனிமொழி எம்.பி., ‘அடிமைகளும், துரோகிகளும் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்த மாநிலத்தின் சுயமரியாதையை அடகு வைக்க முயற்சி செய்கிறார்கள் அதனால்தான் தமிழ்நாடு தலைகுனியாது என்று சொல்லக்கூடிய தெம்பும், திராணியும் கொண்டிருக்கக்கூடிய ஒரே இயக்கமாக திமுக இருக்கிறது” என்றார்.

என்.டி.ஏ பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த கனிமொழி, “தமிழகத்துக்கு ஜீரோ சொன்னவர்களை எதிர்க்காமல் பாஜகவின் கிளைச் செயலராக மாறியிருக்கிறார் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இப்போது என்.டி.ஏ. பழனிசாமியாக மாறியிருக்கிறார்.
நானும் ரௌடிதான் என்று சொல்வதுபோல நான்தான் கூட்டணிக்கு தலைமை என புலம்புகிறார். 100 நாள் வேலைத் திட்ட சட்டத்தின் பெயரை படித்தாரா, அதைப் பற்றி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கேள்வியெழுப்பினார்.

மேலும், ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி; அவர்கள் கூட்டணியின் டிசைனைப் பாருங்கள். * பதவி கொடுத்தவரை கட்சியிலிருந்து நீக்கியவர் பழனிசாமி; போன தேர்தலில் பிரிந்தோர் இப்போது சேர்ந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டுக்கும் மோதல்; இதில் தமிழ்நாட்டை நாம் ஜெயிக்க வைக்க வேண்டும்” என்றார்.

கனிமொழி பேச்சு

முன்னதாக பேசிய கனிமொழி, “துரோகத்தோடு கை கோத்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள – துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர்; தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என ஒரு கூட்டணி இருக்கிறது.

ட்ரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தை கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருட்களுக்கு அமெரிக்காவில் 18% வரி; அங்கிருந்து வரக்கூடிய பொருட்களுக்கு வரியே கிடையாது.
இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார். உழைப்பு, உழைப்பு… என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின். பாசிச சக்திகளை எதிர்க்கக்கூடிய தலைவரும் நான்தான் என்ற உறுதியோடும் வாழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றார் கனிமொழி.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு. பிப்.12 தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

78 கிலோ குராஷ் பிரிவு.. பின்கி பால்ஹாரா அபாரம்! Pinki Balhara

78 கிலோ குராஷ் பிரிவு.. பின்கி பால்ஹாரா அபாரம்!

Pinki Balhara: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் பின்கி பால்ஹாரா, பெண்கள் 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்….

காரைக்கால் துறைமுகம் டு டால்மியாபுரம் & அரியலூர்.. 24 மின்சார லாரிகளை களத்தில் இறக்கிய டால்மியா சிமெண்ட்! Dalmia Cement

காரைக்கால் துறைமுகம் டு டால்மியாபுரம் & அரியலூர்.. 24 மின்சார லாரிகளை களத்தில்

Dalmia Cement: தமிழ்நாட்டில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட கனரக சரக்கு போக்குவரத்திற்காக, டால்மியா சிமெண்ட் நிறுவனம் SwitchLabs மற்றும் EIM ஆகியவற்றுடன் இணைந்து 24 மின்சார…

பட்ஜெட் பிரண்ட்லி பிரீமியம் மாடல்.. சாம்சங் Galaxy S26 FE அல்ட்ரா! Samsung Galaxy S26 FE Ultra

பட்ஜெட் பிரண்ட்லி பிரீமியம் மாடல்.. சாம்சங் Galaxy S26 FE அல்ட்ரா!

Samsung Galaxy S26 FE Ultra: சாம்சங் Galaxy S26 FE அல்ட்ரா மாடல் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது….

கர்நாடக இசையால் அவமதிக்கப்படும் கானா? மீசைய முருக்கு 2 எப்படி இருக்கு? திரை விமர்சனம்! Meesaya Murukku 2 Review

கர்நாடக இசையால் அவமதிக்கப்படும் கானா? மீசைய முருக்கு 2 எப்படி இருக்கு? திரை

Meesaya Murukku 2 Review: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கிய மீசைய முருக்கு 2 படம், கானா இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், அதன் கதை…

25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு.. வெள்ளி வென்றார் ஈஷா சிங்! Esha Singh

25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு.. வெள்ளி வென்றார் ஈஷா சிங்!

Esha Singh: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளிப்…

தினேஷின் புதிய படம் பந்தா காங்க்ஸ்.. ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! Panda Gangs

தினேஷின் புதிய படம் பந்தா காங்க்ஸ்.. ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு!

Panda Gangs: தினேஷின் புதிய படம் “பந்தா காங்க்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது….


Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com