M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

Published on: February 5, 2026 at 5:29 pm
சென்னை பிப்ரவரி 5, 2026; மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை 2026 பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது; மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்யப் போகும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.
ஏனெனில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஏதேனும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அந்த திட்டங்களுக்கு ஆகும் செலவினங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்!
சட்டமன்ற பொது தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இடையே தீவிரப் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் காங்கிரசும் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும் உள்ளனர்.
டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வைகோவின் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியிலும் அங்கம் வகிக்கின்றன. வழக்கம்போல் நாம் தமிழர் தனித்துப் போட்டியென அறிவித்துள்ள நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் இம்முறை தேர்தலில் களம் காண்கிறது.
இதையும் படிங்க: மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. தேதி, இடம் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com