பாட்னா, அக்.6, 2025: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று (திங்கள்கிழமை) பீகார் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை மாலை 4 மணிக்கு மேல் அறிவித்தது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
முன்னதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில், சத் பண்டிகைக்குப் பிறகு உடனடியாக தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடந்தது.
இதையும் படிங்க : லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. பிரசாந்த் கிஷோர்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சேர்ந்து பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவித்தனர்.
பீகார் தேர்தல் தேதி
இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, தேர்தலானது நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.
கட்சிகள் கூட்டணி
இதற்கிடையில், இந்தியா மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளுக்கான இடப் பங்கீடு இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை ஆளுங்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி பாட்னா, பெகுசராய், தர்பங்கா, கிஷன்கஞ்ச் மற்றும் மோதிஹரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலம்
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 131 இடங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸின் மகாபந்தன் 111 இடங்களைக் கொண்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) முகாமில், பாரதிய ஜனதா கட்சி 80 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் (JD(U) 45 இடங்களையும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்சா (HAM(S) 4 இடங்களையும் கொண்டுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரண்டு சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.
காங்கிரஸின் மகாபந்தன் முகாமில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 77 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 11, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இதையும் படிங்க : ராகுல், சோனியா மீது வழக்கு: பீகாரில் ரயிலை மறித்த காங்கிரஸார்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.14, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Gold Rate Today: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 200 அதிகரித்து விற்பனை ஆகிறது….
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
CBI investigation into Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….
Gaza ceasefire: ஏழு பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது….
Tamil News Live Updates October 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்