Padaiyaanda Maveera movie issue: வீரப்பன் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என கௌதமன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Padaiyaanda Maveera movie issue: வீரப்பன் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என கௌதமன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Published on: September 25, 2025 at 9:34 pm
சென்னை, செப்.25, 2025: இயக்குனர் கௌதமின் படையாண்ட மாவீரா படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “கௌதமன் இயக்கத்தில் வெளியான ‘படையாண்டா மாவீரா’ படத்தின் ஒரு காட்சியில் என் கணவர் வீரப்பன் தொடர்பான காட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இதுதொடர்பாக இயக்குநர் எந்தவித அனுமதியும் எங்களிடம் கேட்கவில்லை; படம் எடுக்கிறோம் என்கிற பெயரில், தங்களின் சுயலாபத்திற்காக என்னுடைய கணவர் பெயரை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
படையாண்ட மாவீரா படம்
இயக்குனர் வ.கௌதமன் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்தில் வீரப்பனை, காடுவெட்டி குரு சந்திப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அந்தக் காட்டியில் வீரப்பனிடம் நான் அரசியலில் நிற்க போகின்றேன் என காடுவெட்டி குரு பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த நிலையில் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலக அளவில் தமிழ் கலை பங்களிப்பு.. ஜி.வி. பிரகாஷ், எம்.எஸ் பாஸ்கர்.. பிரேமலதா வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com