பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!

Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் கோவை எம்பி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

Published on: March 25, 2025 at 6:27 pm

சென்னை மார்ச் 25 2025: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் கோவை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சென்னையில் இன்று (மார்ச் 25 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் யாரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்? அதிமுக பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், ” தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து மத்திய தலைமை முடிவு செய்யும்; பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமை ஏற்பாடு செய்வதே முடிவாக இருக்கும்.

அவர்களின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் யார் யாரை சந்திக்கிறார் என்பதும் கட்டாயம் தெரியவரும்” என்றார்.

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் 2021 சட்டமன்ற தேர்தலை அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து சந்தித்தது. இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றியை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக மற்றும் பாரதிய ஜனதா இணைந்து சந்திக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் விவகாரம்; அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை.. செல்வப் பெருந்தகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com