Selvaperunthagai MLA: யூ டியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமக்குத் தொடர்பில்லை என உறுதிப்பட தெரிவித்தார் எம் எல் ஏ வும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான செல்வப் பெருந்தகை.
Selvaperunthagai MLA: யூ டியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமக்குத் தொடர்பில்லை என உறுதிப்பட தெரிவித்தார் எம் எல் ஏ வும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான செல்வப் பெருந்தகை.
Published on: March 25, 2025 at 3:55 pm
சென்னை மார்ச் 25 2025: காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும்; தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை சென்னையில் இன்று (மார்ச் 25 2025) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என கூறினார். தொடர்ந்து கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்றால் அவர்கள் நிரூபிக்கட்டும் என்றார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தொடர்ந்து கூறுகையில், ” சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் வீசப்பட்ட விவாகரத்தை நான் ஏற்கனவே கண்டித்து உள்ளேன். அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை.
இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவர் நீதிமன்றத்தில் முறையிடலாம். மாறாக மலம் அள்ளுகின்ற மக்களை கொச்சைப்படுத்தக்கூடாது. குடித்துவிட்டு தூங்குகிறார்கள் என்றெல்லாம் பேசக்கூடாது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் நீங்கள் youtube சவுக்கு சங்கர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுப்பீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு, “நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்; சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்றார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவர் பின்னால் இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை, ” யார் அந்த காங்கிரஸ் பிரமுகர்? அடையாள அட்டை இருந்தால் காட்டுங்கள்? அவர் காங்கிரஸில் இருக்கிறார் என்ற உறுப்பினர் கார்டை காட்டச் சொல்லுங்கள்” என்றார்.
மேலும் துப்புரவு தொடர்பான காண்ட்ராக்ட் சர்ச்சைக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை, ” நான் எப்படி அந்த காண்ட்ராக்ட் எடுக்க முடியும்? ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் காட்டுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: கள் மீதான தடையை நீக்க வேண்டும்; காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com