Nanguneri MLA Ruby Manoharan: கள் பானத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம் எல் ஏ ரூபி மனோகரன் சட்டப்பேரவையில் கோரிக்கையை முன் வைத்தார்.
Nanguneri MLA Ruby Manoharan: கள் பானத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம் எல் ஏ ரூபி மனோகரன் சட்டப்பேரவையில் கோரிக்கையை முன் வைத்தார்.
Published on: March 25, 2025 at 3:27 pm
Updated on: March 25, 2025 at 10:12 pm
சென்னை மார்ச் 25 2025: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கோரிக்கை ஒன்றை இன்று (மார்ச் 25 2025) முன்வைத்தார். அந்தக் கோரிக்கையில், ” தமிழ்நாட்டில் பனை மரத்திலிருந்து கள் பானம் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்; ஆவின் போல் கள் மற்றும் பதநீரை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
இதற்காக கொள்முதல் விற்பனை நிலையங்கள் நிறுவ வேண்டும்” என்றார். தொடர்ந்து நியாய விலைக் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும் என கூறிய ரூபி மனோகரன், கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
அமைச்சர் பொன்முடி பதில்
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “கள் பானத்தை பொருத்தமட்டில் அதில் சிலவற்றை கலந்தால் அது போதைப் பொருளாக மாறிவிடும்; அதுபோன்ற நிலை வந்து விடக்கூடாது” என்றார்.
மேலும் பதநீர் மற்றும் கள்-ஐ அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிசீலித்து வரும் காலத்தில் நடவடிக்கை எடுப்பார்” எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்; சட்டப்பேரவையில் மு.க ஸ்டாலின் உறுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com