YouTube videos Removed: உலகெங்கிலும் உள்ள இணைய பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் யூ-ட்யூப் கிட்டத்தட்ட 1 கோடி வீடியோக்களை டெலிட் செய்துள்ளது. இதில் இந்தியா டாப் ஆக உள்ளது.
YouTube videos Removed: உலகெங்கிலும் உள்ள இணைய பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் யூ-ட்யூப் கிட்டத்தட்ட 1 கோடி வீடியோக்களை டெலிட் செய்துள்ளது. இதில் இந்தியா டாப் ஆக உள்ளது.
Published on: March 9, 2025 at 2:14 pm
விதிகளுக்கு உட்படாமல் யூ-ட்யூபில் பதிவிடப்பட்ட வீடியோக்களை டெலிட் செய்து அந்நிறுவனம் கடும் நடிவடிக்கை எடுத்துள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் 2024 க்கு இடையில் வெளியிடப்பட்ட சுமார் 9.5 மில்லியன் வீடியோக்களை யூ-ட்யூப் தளத்திலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 3 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளடக்த்தில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கும் பதிவு தளமான யூ-ட்யூப், வெறுப்புப் பேச்சு, துன்புறுத்தல், வன்முறை மற்றும் தவறான தகவல்களைத் தடை செய்துள்ளது. பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான தளத்தை மேம்படுத்தும் வகையில், தவறான வீடியோக்கள் பார்வையாளர்களை சென்றடைவதற்கு முன்பு அவற்றை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான வீடியோக்களை அகற்ற, ஏஐ டெக்னாலஜி, தனிப்பட்ட அமைப்புகள் மற்றும் மதிப்பீட்டாளர்களையும் யூ-ட்யூப்
நம்பியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதிகமான வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குழந்தை பாதுகாப்பு மீறல்கள் மற்றும், குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலான வீடியோக்கள் 5 மில்லியனுக்கும் அதிகமாவை நீக்கப்பட்டுள்ளன.
சேனல்கள் நீக்கம்
தனிப்பட்ட வீடியோக்கள் மட்டுமல்லாமல் 4.8 மில்லியன் யூ-ட்யூப் சேனல்களும் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட சேனல்கள் ஸ்பேமிங் மற்றும் பயனாளர்களை மோசடி செய்வதற்காக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சேனல் யூ-ட்யூப் தளத்திலிருந்து நீக்கப்படும்போது, சேனலில் பதிவிடப்பட்ட அனைத்து வீடியோக்களும் மறைந்துவிடும். மொத்தத்தில், இது 54 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை தளத்திலிருந்து அழித்துள்ளது,
மேலும், யூ-ட்யூப் அதன் விதிகளை மீறியதற்காக 1.2 பில்லியன் கருத்துக்களையும் நீக்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஸ்பேம் கருத்துக்கள். மேலும், சில துன்புறுத்தல், வெறுப்பு பேச்சு அல்லது அச்சுறுத்தல்களாக இருந்தவைகள்.
பொருத்தமற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு யூ-ட்யூப் இந்த மதிப்பீட்டு முறையை மேம்படுத்தி உள்ளது. இந்த நீக்குதல் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கிரியேட்டர்கள் விதிகளைப் பின்பற்றவும், நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் வீடியோக்கள் பதிவிடுவதை தவிக்கவும் நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. வீடியோக்களை பதிவிடுபவர்கள் இவற்றை முறையாக கருத்தில் கொண்டு பதிவிட வேண்டும். இல்லையெனில், உங்கள் வீடியோக்களை இழக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
இதையும் படிங்க மார்ச் 14, 2025ல் முழு சந்திர கிரகணம்.. பிளட் மூன்.. இதன் சிறப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com