Jagdeep Dhankhar admitted to AIIMS: குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
Jagdeep Dhankhar admitted to AIIMS: குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
Published on: March 9, 2025 at 1:22 pm
Updated on: March 9, 2025 at 8:54 pm
துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9, 2025) அனுமதிக்கப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
PTI SHORTS | Vice President Jagdeep Dhankhar admitted to AIIMS, condition stable
— Press Trust of India (@PTI_News) March 9, 2025
WATCH: https://t.co/YLLOdqA2nj
Subscribe to PTI's YouTube channel for in-depth reports, exclusive interviews, and special visual stories that take you beyond the headlines. #PTIVideos
இதற்கிடையில், தங்கரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜக்தீப் தங்கரின் உடல் நிலை குறித்து நேரில் கேட்டறிய மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.
இதையும் படிங்க : கோவாவில் ரூ.11.67 கோடி ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com