Tamil Nadu BJP state president Annamalai: நீங்கள் அடித்த கமிஷன் தொகை எவ்வளவு என திமுக அரசு மீது கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை.
Tamil Nadu BJP state president Annamalai: நீங்கள் அடித்த கமிஷன் தொகை எவ்வளவு என திமுக அரசு மீது கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை.
Published on: March 3, 2025 at 5:10 pm
சென்னை, மார்ச் 3, 2025: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசிய பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டு, ” நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் வலைதளத்தில் அண்ணாமலை, ” 2025 மார்ச் 14ஆம் தேதி வரும் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு நிறைவு பெறும்போது தமிழக அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் ஒன்பது புள்ளி ஐந்து லட்சம் கோடி ரூபாயை நெருங்கி இருக்கும்.
2021 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலின், பேசிய காணொளியை பார்க்கும் வாய்ப்பு தற்போது கிட்டியது.
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
— K.Annamalai (@annamalai_k) March 3, 2025
இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய… pic.twitter.com/XkVeXJRwEq
அதில் கமிஷன் அடித்த ரூபாய் 5 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக ஆக்கி உள்ளார்கள் என்கிறார் ஸ்டாலின். இன்று தமிழ்நாட்டின் மொத்த கடன் ஒன்பது புள்ளி அஞ்சு லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கேள்விக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் கடன் உயர்வு.. பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு? தங்கம் தென்னரசு கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com